க.சி.அம்பிகாவர்ஷினி கவிதைகள்
தலைகுப்புற விழுகின்ற எண்ணெய்க் குப்பியென்ன ஒளிவிளக்கா?
விழுந்தணைந்தபின்
குப்பென்று பற்றியடங்கும்
உயிரென்ன மெல்லிய இருளா??!!நீர் தழும்பத் திரண்டிருக்கும் கண்களை
செந்தாமரைகளென்கிறாய்
இரு புருவங்களுக்கு மத்தியில்
முழங்கு படிகத்தை வைத்தது போலிருக்கிறது
விழிக்கோளங்கள்
பாடும் கிண்ணங்களாக ஒலிக்கின்றன....-க.சி.அம்பிகாவர்ஷினி
தேறாத மேஜிக்காரன்
மிகுந்த ஆயாசத்தோடு
மீண்டுமொரு முறை
மந்திரக்கோலை சுழற்றிப்பார்க்கிறேன்
எதிலும் என்ன தவறென்று
விளங்கவேயில்லை.....வித்தைக் கட்டுக்குள்
அடங்காத சீட்டுகள்
எரிச்சலூட்டும் சப்தத்துடன்
எள்ளி நகைக்கின்றன
இடம்மாறச் சொன்ன பந்துகளோ சிறிதாயின....உடல் வெட்டித் துண்டாக்க
ஓங்கிய வாள்தான்
மிருதுவான மலராகி
கொடூரமாய் தீண்டியது
எப்போதும் பிடிக்கு சிக்கும் தோட்டா
விரலையின்று துளைத்தே விட்டதுஎல்லாமும் பரவாயில்லை
என்...
மல்லிகா
வெயில் பளபளவெனக் காய்ந்தது. செல்வியின் செம்பட்டை முடி வெய்யிலில் மினுங்கியது. வேப்பம் பழங்கள் பொறுக்குவதற்காக அவளும், கவிதாவும் அந்தக் காட்டிற்கு வந்திருந்தனர். காற்று இல்லாததால் பழங்கள் நிறைய உதிர்ந்திருக்கவில்லை. இரண்டு மணி நேரமாகப்...
நினைவுகள் நிரம்பிய நித்திரையற்ற இரவு
“ஏ.. புள்ள செலுவி இங்க வாடி செத்த”“யத்தே சொல்லுத்தே”“நாளக்கி மொத பஸூக்கு நானும் மாமனும் மெட்ராஸூக்கு கெளம்புறோம்டி. நாளக்கலிச்சு வெசால கெலம ரவைக்குள்ளாற வந்துறுவோம். பொளுது எறங்கங்காட்டியும் ஊட்டுல ரைட்டு போட்டு.. விடியங்காட்டியும்...
அந்தோன் செகாவின் நாய்கள்
அந்தோன் செகாவின் ஒவ்வொரு கதையும் மிகச் சாதாரண மனிதர்களைப் பற்றியது. நிராகரிப்பு, கைவிடப்படுதல், துக்கம், காதல் எனப் பல உணர்வுகளைத் தனது கதைகளில் கையாள்கிறார் செகாவ். வரலாற்று அனுபவங்களின் பின்னணியில் தனிமனிதனை வைத்த...
பேதமுற்ற போதினிலே-4
மெய்யுயிர்
மெய் என்பதற்கு அகராதிப்படி உண்மை, அறிவு, உணர்ச்சி, பொருள், எழுத்துவகை, உடல் என்று பொருள் தருகிறது. உணர்ச்சியில் பொய்யில்லை; அறிவிலும் பொய்யில்லை; அழியக்கூடிய உடல் எப்படி மெய்யாகிறது? உயிர்தானே மெய்யாயிருக்க முடியும்? தொட்டு,...
‘துயில்’ நாவல் – வாசிப்பனுபவம்
ஒரு மாதகாலம் மருத்துவமனையில், தாம் தங்கியிருந்த போது, நோயாளியின் படுக்கை எவ்வளவு வலி நிரம்பியது என்பதைப் பூரணமாக உணர்ந்ததாக முன்னுரையில் குறிப்பிடும் திரு எஸ்.ரா அவர்கள், நோய்மையுறுதலின் நினைவுகளையும், அதன் விசித்திர அனுபவங்களையும்,...
கரும்பலகை -நூல் விமர்சனம்
ஆசிரியராக வேண்டுமென்ற கனவு நம் எல்லோருக்கும் ஒருமுறையாவது நம் வாழ்வில் துளிர்த்திருக்கும். சமூகத்தில் தன்னாலான மாற்றத்தை ஏற்படுத்த இப்பணியைத் தேர்ந்தெடுப்பவர்கள் ஒருபுறம், நல்ல சம்பளம், ஓய்வு போன்ற காரணங்களுக்காக இப்பணியைத் தேர்ந்தெடுப்பவர்கள் மறுபுறம்....
திரிசடையின் கவிதைகள்: பிரபஞ்ச தரிசனமும் பெண் கற்பும்
மறைந்த கவிஞர் திரிசடை பற்றிய சிறு அறிமுகத்தைத் தந்த பின் கவிதைகளை அணுக நினைக்கிறேன். திரிசடையின் இயற்பெயர் சாந்தா, சாந்தா சுவாமிநாதன். நவீன தமிழ் எழுத்தின் முன்னோடிகளில் ஒருவரான நகுலனின் தங்கை அவர்...
நேத்ரா
வித்யா சுருக்கை இழுத்துப்பார்த்தாள். இறுகுகிறது. ம்ம்ம்…சரி.. அடுத்த அறையிலிருந்து நாற்காலியை எடுத்து வந்தாள். ஏறி நிலைதடுமாறாது நின்றாள். காற்றாடியில் நுனியைக் கட்டி சுருக்கை விரித்து தலையை உள்ளே நுழைத்து முடிச்சை நெருக்கினாள். சரியாக...















