ச.துரை கவிதைகள்
ஏனெனில்கைகள் தேயிலை தோட்டத்திற்கு
குத்தகைவிடப்பட்டதும்
சிலந்திகளோடு உறங்கி
எச்சில் கோப்பைகளை கழுவுவேன்
என்னிடம் அறுபது மணிநேரம்
இயங்ககூடிய போதை வஸ்து
இருந்தாக நம்பினார்கள்
தோட்டத்திலிருக்கு சூளைக்கு மாற்றப்பட்டதும் எனது கைகள்
வெட்டப்பட்டு வேறு கைகள் பொருத்தப்பட்டன
யார் இந்த அந்நியனென்று கேட்ககூடாது
என் உடையென்று கதறகூடாது
கொஞ்சமும் பொருத்தமற்ற
உணவுக்காக சட்டங்களில் மணல்களை
நிரப்பி...
நினைவோ ஒரு காமிக்ஸ் பறவை!
சித்திரக்கதைகள் எனக்குள் ஒரு தாக்கத்தை சிறுவயதிலே ஏற்படுத்தியது ஆச்சர்யமானதொரு சம்பவம்.
அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எனது குடும்பம் மிகவும் வறுமையில் வாடிய காலக்கட்டங்கள் அவை.
நான், அம்மா, அப்பா, அண்ணன் ஆகிய நால்வரும்...
பாலை – பொதுத் திணையின் அவலம்.
1.அதிகரிக்கும் சிறுபொழுது.
காடுறை உலகில் மேகங்கள் இறங்கவில்லை
நிலத்தின் தலைமக்கள் மரம் சுமக்கிறார்கள்
சுமை மனிதனாக இருக்கும் தலைவன்
லாரி டயர்களுக்கு இடையே கண்ணயரும் தருணம்
குளம்படிச் சத்தம் கேட்டு தூக்கம் அழிகிறான்
எல்லைக்கு அப்பாலுள்ள அவன் வரும் நாள் தெரியவில்லை
இங்கு,...
காணாமல் போவது எத்தனை வசீகரமானது.
தினம் தினம்எத்தனையோ பேர்காணாமல் போகிறார்கள்குழந்தைகள்முதியவர்கள்பெண்கள்மனநிலை சரியில்லாதவர்கள்.காணவில்லை விளம்பரங்கள்செய்தித்தாள்களில்தொடர்ந்துவருகின்றன. அவள் மட்டும்தொலைவதே இல்லைஎங்கு போனாலும்வழி தெரிந்து விடுவதுகொடுந் துயரம்.காணாமல் போகக்கூடஆணாக வேண்டும் தொலைவதற்கு முன்பானமுன்னேற்பாடுகளின் பட்டியல்நெடுஞ்சிகை மழித்தல்காயம் முற்றும் மூடும் காவிருத்ராட்ச மாலைதிருவோடுஅணங்கெனும் அடையாளம் அழிந்தோர் யாக்கைஏதோவொரு...
முத்துராசா குமார் கவிதைகள்
எச்சித்தட்டு
புதையலாகத் தென்பட்டது
தட்டில் பொறித்தப் பெயர்.
வழித்தாலும் உட்கொள்ள முடியவில்லை.
இரவில் எப்படியும் அபகரித்துவிட
புதையலுக்கு மேலே
வனம் செய்து
நீர் தேக்கினேன்.
வனம் அழித்து வறட்சியாக்கியும்
புதையலைப் பெயர்க்க முடியவில்லை.
மூன்று வேளைத் தோல்விகள் தாளாது
பெயருடைய ஆளையே
விழுங்க எழுந்தேன்.
சுவரில் தொங்கும்
கண்ணாடிச் சட்டகத்துக்குள்
சேரில் அமர்ந்திருந்தார்...
ப்ரியா தம்பி”யின் “பேசாத பேச்செல்லாம்” கட்டுரைத் தொகுப்பு.
ஒரு புத்தகத்தைப் வாசித்து முடித்த பிறகு அதைப்பற்றி நிறைய எழுத வேண்டுமென்று மனம் ஒருபுறம் பரபரக்க, இதற்கு மேல் எழுத என்ன இருக்கிறது என்ற நிறைவு மறுபுறமும் ஒருசேர ஏற்படும் உணர்வை அனுபவித்தது...
செண்பா சித்தி
“வீட்ட அலங்கோலம் பண்ணி வைச்சி இருக்கான், ஹாலுகுள்ள ஷூ கிடக்கு. எத்தனை டைம் சொல்றது ஷூ போட்டு வீட்டுக்குள்ளே வராதேன்னு”இப்போ தான் கொஞ்ச நேரம் முன்ன முழிப்பு தட்டுச்சி. எழுந்திரிக்க மனசு இல்ல....
பா.திருச்செந்தாழை கவிதைகள்.
ரகசியங்களற்றவனின்
நிழலில்
கண்ணாடி வளர்கிறது.எப்படியாயினும்,
இதற்கு ரகசியமெனப் பெயரிட
நான் இன்னொருவருக்கும்
இதனை தத்துக்கொடுக்க வேண்டியதிருக்கிறது.ரகசியங்கள் பெறுமதியானவை
என்பதிலிருந்து
வெளியேறிவிட்ட என் புதுவயதில்
நான் சிறிய காற்றாடிகளை
நீண்ட தொலைவில் செலுத்தும்
ஞானம் பெற்றேன்.எல்லாவற்றிலிருக்கும்
ரகசியங்களை
என் வெகுளித்தனம் சுரண்டி விலக்குகிறது.
அங்கே குருதியற்ற ஓருடல்...
அவள் நர்ஸ் ஆகிறாள்
வழமையாக காலை ஐந்தரை மணிக்கு கண் விழித்துப் பழகியது அவ்னி வீட்டு நாய். எப்போதும் அவ்னி சுத்தமாக இல்லாவிட்டாலும் நாயைச் சுத்தமாக வைத்திருப்பான் கழுத்தின் அளவுக்கு ஒரு வெள்ளி வளையம். ஏழாயிரத்து ஐந்நூறு...
வெதும்பல்
அன்று சுபத்ராவுக்கு சமையல் கட்டில் வேலை நிறைய இருந்தது. அம்மாவின் கைமணம் போல் இல்லையென்றாலும் ஓரளவு நன்றாகவே சமைப்பாள். கற்றும் கொண்டாள். ஒருவேளை அப்பா பரமேசன் பேசும் பேச்சுக்களிலிருந்து வந்ததாகக் கூட இருக்கலாம்....















