பெட்டகம்

அச்சு இதழ்களில் மட்டும் பிரசுரமான படைப்புக்களை இணையதளம் மூலமாகப் பரவலான வாசகர்களின் கவனத்திற்கு  கொண்டுச் செல்ல   ‘பெட்டகம்’பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்களின் அனுமதி பெற்று இப்பகுதியில்  படைப்புகள் வெளியாகும்.

யூதா – சிறுகதை

அந்தப் பறவை யூதாவை அவன் வீட்டிலிருந்து கொத்திக் கொண்டு வந்து இந்தப் பீக்காட்டிலே போட்டது. யூதா இப்படித்தான் நம்பினான். ஆயா சொல்லும் கதைகளில் செட்டையடித்து பறக்கும் பறவை. அது பாலாற்றின் கரையோரம் இருக்கும்...

எனக்கு பிடித்த நாவல்கள்

-ஐம்பதுவருடங்களுக்கு மேலான வாசிப்பு அனுபவத்தில் எனக்கு பிடித்த நாவல்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்.  இன்றைய இளைய தலைமுறை வாசகர்களுக்கு பரிந்துரைக்கும் விதமாகவும்  முக்கிய  எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களை அறியத் தருவதாகவும் இந்த பட்டியல் இருக்குமென...

பஷீரிஸ்ட்- சிறுகதை

திருச்சியிலிருந்து திண்டுக்கல் வரையிலான இரண்டு மணி நேரப் பிரயாணம் சலிப்பூட்டுவதாக  உணர்ந்த அடுத்த கணம், தொடர்ந்து இதே பேருந்தில் பழனி வரை செல்வது என்று ஏற்கனவே எடுத்திருந்த முடிவை இவன் மாற்றிக் கொண்டான்....

வன தேவதை- மொழிபெயர்ப்பு சிறுகதை

  ஆங்கிலத்தில்: விளாதிமீர் நபக்கோவ் தமிழில்: செ. ஜார்ஜ் சாமுவேல்சிந்தனையில் ஆழ்ந்திருந்த நான் மைக்கூட்டின் அசையும் நிழலின் சுற்றுவட்டக் கோட்டை வரைந்து கொண்டிருந்தேன்.  தூர அறையில் கடிகாரத்தின் மணியோசை கேட்ட நேரத்தில், கனவே...

தமிழ் உரைநடை வளர்ச்சி -கட்டுரை

தமிழ் இலக்கியம் முழுவதும் ஐரோப்பியர்கள் வரும் வரையில் செய்யுள் நடையில் இருந்துள்ளது. தமிழ்மொழியில் தனி உரைநடை நூல் இருந்ததில்லை. பண்டைத்தமிழர் செய்யுள் நடையில் மட்டும் நூல் இயற்றி, உரைநடையில் நூல் இயற்றுவதை ஏன்...

விலக்கு

சாலையைக் கடந்து பள்ளிக்குச் செல்ல பச்சை விளக்குக்காக மைலோ பாக்கெட்டை உறிஞ்சிக்கொண்டே லாவண்யா காத்திருந்தபோது தன்னைப் பார்த்துவிட்டுச் சட்டென்று விலகி நான்கைந்து அடிகள் முன்னால் போய் நின்ற அவளைக்  கண்டவுடன் அவளது ப்ளம்ப்பி...

தலைகீழ் பாதை

கைப்பையிலிருந்து சாவியை எடுத்து கதவைத் திறந்தான் சுப்பிரமணி. உள்ளே அடைத்திருந்த காகிதமும் மையும் கலந்த புழுக்கநெடி ஆவியை போல் கடந்து சென்றது. பலகைத் தடுப்புக்குப் பின்னால் தலையிறங்கப் போர்த்தியிருந்த நகலெடுக்கும் இயந்திரம் மங்கிய...

ராதா அக்கா – சிறுகதை

 விக்கிரமசிங்கபுரம் பெரியப்பா வீட்டுக்குப் போவதற்காக அம்பாசமுத்திரம் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன். குற்றாலத்தில் இரண்டு வாரமாகவே நல்ல சாரல். பொழுது விடிந்து ஒன்பது மணியாகியும் கூட சூரியன் முகத்தைப் பார்க்க முடியவில்லை. வானம்...

ஒரு துண்டு வானத்தின் வழியே மினுக்கும் நட்சத்திரங்கள்

தமிழில் அறிவியல் சிறுகதைகள்  சிறுகதை என்பது அளவில் சிறியதாகவும் அதே நேரத்தில் ஓர் உணர்வு, ஒரு நிகழ்வு, ஒரு மையம் என்று ஏதேனும் ஒன்றினைப் பற்றி மட்டும் பேசி அவற்றோடிழைந்த ஒரு திருப்பத்தையும் கொண்டிருக்க...

தவறு -மொழிபெயர்ப்புச் சிறுகதை

நீண்டகாலமாக விமெர்கற்றில் உள்ள தனது நாட்டுப்புறத்து வீட்டில் வாழும் எண்பத்தாறு வயதான பிரபல ஓவியர் லூசியோ பிறெடொன்ஸானி ஓர் காலையில் எழுந்து தனக்கு ஒவ்வொரு நாளும் வருகின்ற தினப் பத்திரிகையைத்  திறந்தபோது பிரமித்துப்...